Wednesday, April 18, 2012

கியூபா இன்றைய சோஷலிசத்தின் நம்பி்க்கை

"கியூபாவில் நகர்புற விவசாயிகள் சராசரியாக மாதத்திற்கு‍ 200 வட அமெரிக்க டாலர் சம்பாதிக்கின்றனர். இது‍ கியூபாவில் ஒரு‍ டாக்டரின் ஊதியத்தை விட பத்து‍ மடங்காகும். இதனை ஒரு‍ புகாராக காஸ்ட்ரோ விடம் தெரிவித்தபோது‍ , 'ஏழை நாடுகளில் விவசாயிகள் ஒட்டிய வயிறும், கோவணமுமாகத்தான் இருக்கிறார்கள். நம் நாட்டு‍ விவசாயிகள் வசதியாக இருக்கட்டும்'. இதில் எந்த கட்டுப்பாடும் விவசாயிகளுக்கு‍ விதிக்கப்போவதில்லை என்று‍ கூறி காஸ்ட்ரோ அனுப்பிவிட்டார்". மார்க்சிஸ்ட் மாத இதழில்.

Wednesday, April 4, 2012

மார்க்சியம்

உழைக்கும் மக்களின் இரத்தத்தை உறி்ஞ்சி மேலும் தன்னை வலுப்படுத்திக் கொண்டு‍ முழு‍ வீரியத்துடன் மீண்டும் மீண்டும் உழைக்கும் மக்களின் உழைப்பை சுரண்டக் கூடியது‍ முதலாளித்துவம்.

Wednesday, March 7, 2012

Wishes

The thing women have yet to learn is nobody gives you power.
You just take it.
With Revolutionary Greetings By Suthir.R

Monday, March 5, 2012

"சமத்துவம்"


நிலமும்,வளமும்,கல்வியும்,அதிகாரமும்  என்று‍ தாழ்த்தப்பட்ட
மக்களுக்கு‍ம் கிடைக்கிறதோ அன்றுதான் சமத்துவம் முழுமை பெறும்.
           நிலம்......பொருளாதாரம் கொடுக்கக்கூடியது‍ மட்டுமல்ல. அது‍ அங்கீகாரத்தை உறுதிபடுத்தும் கருவி.ஆகையால்தான் துனி மண் ஆயினும் சுதந்திரம் வேண்டும் என்கிற கோட்பாட்டினை நாம் அனைவரும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.
           நிலத்தை ஆதிக்கம் செய்த மிராசுதாரர்கள்,நிலக்கிழார்கள்,
அம்பலக்காரர்கள் சாதிய ஆதிக்கத்தையும் தூக்கிப்பிடித்தனர்.
           நிலத்தை உழுதவர்கள்,பாதுகாத்தவர்கள் "கூறுகள்" என்றும் "அடிமைகள்" என்றும் "சாதிய வரலாறு‍" அடையாளப்படுத்துகிறது.
                                              ,.......புத்தகத்தில் படித்தது,,,.................... 

Thursday, March 1, 2012

குடும்பம்,தனிச்சொத்து,அரசு - எங்கெல்ஸ்


குடு்ம்பம்
குடும்பத்திற்கு‍ ஆண் தலைவர்
பெண் வீட்டு‍ வேலைகளும் மகப்பேறு‍ தொடர்பான அனைத்திற்கும் பொறுப்‌பு.மரபுரீதியாக எழுதப்படாத சட்டமாக பாலினப் பாகுபாட்டை நிலைநிறுத்தி வந்திருப்பதோடு,தலைமுறை தலைமுறையாக இக்கருத்துக்களைப் பின்வரும் சந்ததியினருக்கு‍ எடுத்துச் செல்லுகிற வலிமையான ஊடகமாகவும் குடும்பம் திகழ்கிறது.
இக்குடும்ப அமைப்பு தனிச் சொத்துரிமையின் பாதுகாவல் பொறுப்பையும் நிறைவேற்றி வந்துள்ளது.
தொடக்கால மனிதர்கள்,குலங்கள்,குலக் குழுக்கள்,கணங்கள்,இவ்வமைப்புகளினூடாக நிலவிய குடும்ப உறவுகள்,குழு‍ மணங்கள்,குலங்களுக்கிடையிலான உறவுகளும் போர்களும் தனிச்சொத்தின் உதயம்,குலங்களுக்கிடையிலான சண்டைகள், அரசு‍ என்ற புதிய சமுதாய அமைப்பின் தோற்றம் வரை நெடிது‍ பயணித்த ஓர் ஆழமான ஆய்வைக் கொண்டது‍, எங்கெல்சின் குடும்பம்,தனிச்சொத்து,அரசு‍ ஆகியவற்றின் தோற்றம் என்ற நூலின் வரிகள்.

Thursday, January 13, 2011

world

ஒட்டுமொத்த உலகமும் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் பயணிதுக்கொண்டிருக்கிறது. இருந்தாலும் இது மனிதனுக்கு மனிதன் மாறுபடுகிறது. வாழ்க்கை என்ன என்பதை அவர்கள் புரிந்து கொண்ட கோணத்தில்  எடுத்துக் கொண்டு. ஒட்டுமொத்த உலகமும் எந்த பிரச்சனையை சந்திக்க இருக்கிறது. உணவு பற்றாக்குறை , அத்தியாவசிய பொருட்கள் எதுவும் எளிதில் எல்லோருக்கும் கிடைக்கபோவதில்லை . மிகப்பெரிய அடிதடி மனித இனத்துக்குள் வர இருக்கிறது .